Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
சிவகார்த்திகேயன் படத்தில் ஆதி இசையில் பாடிய அனிருத்

SooriyanFM Gossip - சிவகார்த்திகேயன் படத்தில் ஆதி இசையில் பாடிய அனிருத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

990 Views
சிவகார்த்திகேயன் படத்துக்காக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில் பாடியுள்ளார் அனிருத்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார்.

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனுக்கு நிறைய சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பதால், கோடை விடுமுறையை முன்னிட்டு மே 1-ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறது படக்குழு.

இந்தப் படத்தில், ‘டக்குனு டக்குனு’ என்று தொடங்கும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஆதி. மேலும், இதற்குக் காரணமாக அமைந்த சிவகார்த்திகேயனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

‘டக்குனு டக்குனு’ பாடல், இன்று ரிலீஸாகிறது. இதுதான் ‘Mr. லோக்கல்’ படத்தில் இருந்து முதலில் வெளியாகும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top