படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மன்சூரலிகான். இவர் திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்.
பழனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மரக்கிளையில் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை பார்த்த மன்சூரலிகான் "நான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறேன்" என்று சொல்லி, ஆரீரரோ.. ஆராரிரோ.. என்று பாட ஆரம்பிக்க, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து கொண்டது.
மன்சூரலிகானை கண்ட மக்கள் அந்த இடத்தில் ஒன்றுகூடினர், அப்போது அவர்களிடம் மன்சூரலிகான் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார்.