இந்திய சீக்கியர்கள் 2200 பேருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தங்கள் நாட்டிற்கு உள் நுழைவதற்கான வீசாவை வழங்கி வைத்துள்ளது. பாகிஸ்தானில் இந்த மாதம் 12ம் திகதி முதல் ஏப்ரல் 21 திகதி வரை பைசாகி திருவிழா (BaisakhiFestival ) நடைபெறவுள்ளது. குறித்த திருவிழாவில் கலந்துகொள்ளவதற்காகவே 2200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் விசாக்களை வழங்கியுள்ளது.
வருடம்தோறும் நடைபெறும் பைசாகி திருவிழாவிற்காக இந்திய சீக்கியர்கள் பாகிஸ்தானிற்கு யாத்திரையாக செல்வது வழக்கம். குறித்த சீக்கிய யாத்ரீகர்களுக்கு, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலங்களான பஞ்ச சாகிப், நன்கனா சாகிப், மற்றும் கர்தார்பூர் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று வழிபாடுகள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் விழாவிற்கு செல்லவுள்ள 2200 சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் விசாக்களை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமானதாகும்.
இது குறித்து பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மங்களகரமான பைசாகி திருவிழாவில் கலந்துக் கொள்ளவரும் அனைத்து சீக்கிய சகோதர , சகோதரிகளையும் பாகிஸ்தான் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த புனிதப்பயணம் யாத்ரீகர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைய வாழ்த்துகிறோம் என குறிப்பிட்டுள்ளது.