மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், பணத்தை திருடிய குற்றத்திற்காக, தனது இரு கைகளையும் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உணவகத்தல் சுமார் 6 வருடங்களாக பணியாற்றி வந்த அந்த இளைஞர், உணவகத்தில் இருந்த 1.1 லட்சம் ரியாலை திருடியமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அந்த உணவகத்தின் உரிமையாளர், அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து இளைஞனின் கைகளை வெட்டுமாறு, நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
நீதவானின் உத்தரவிற்கு அமைய, குறித்த இளைஞரின் கைகளைக் காவல்துறையினர் வெட்டி அகற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.