பெல்ஜியம் சர்வதேச தாடி, மீசை போட்டி - 2019
Sooriyan Gossip - பெல்ஜியம் சர்வதேச தாடி, மீசை போட்டி - 2019Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
வேலை சுமை, இணையத்தளத்தில் இறுகிப்போன நமக்கெல்லாம் இப்படியான சில சுவாரஷ்யமான விடயங்கள் எங்களை சந்தோசப்பட செய்கின்றன. பெல்ஜியம் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான வித்தியாசமான தாடி மற்றும் மீசைக்கான செம்பியன்ஷிப் போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் அன்ட்வெர்ப் பகுதியில் நடந்த இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வித்தியாசமான மீசை மற்றும் தாடியை வைத்திருக்கும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டி 3 நாட்களாக நடைபெற்றது. இந்த செம்பியன்ஷிப் போட்டி 1995ஆம் ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது அடுத்து 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் ஒக்கலன்ட் பகுதியில் நடைபெற இருக்கின்றமை குறிப்பிட தக்கது.