நீண்டகாலமாக முடி உதிர்வால் பாதிக்கப்பட்டு வரும் ஆண், பெண் இரு பாலாருக்குமான சிறந்த தீர்வுகள் இதோ...
தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாலை, தாச்சியில் இட்டு காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின், சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். இது முடி உதிர்வை தடுக்க உதவுகின்றது.
கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் என்பவற்றை சேர்த்து தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிப்பதால், முடி உதிர்வு தடுக்கப்படுவதுடன், கூந்தல் வறட்சி இல்லாமல் மிருதுவாக இருக்கும்.
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதிலாக மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடுவதுடன், முடி கொட்டும் சிக்கல் ஏற்படாது.
சிறிதளவு சீயக்காய், வெந்தயம் சிறிதளவு, பச்சைப்பயறு என்பவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்து கொண்டு, குளிக்கும் போது தலைக்குத் தேய்த்துக் குளித்தால், முடி அடர்த்தியாக வளரும்.