சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், காலமாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் இந்திய தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் கிரேசி மோஹனுக்கு இறக்கும் போது 66 வயது.
கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் இவர் ரசிகர்களை வசீகரித்தவர்.
அடிப்படையில் பொறியாளராக திகழ்ந்த இவர், கமல் ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்து தனக்கென்று ஒரு தனி பாணியில் நடித்து வந்தார்.
முக்கியமாக, கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வசனம் எழுதியவரும் இவரே. அது மாத்திரமன்றி, கமல் ஹாசனின் மைக்கேல் மதன காமராஜ், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களுக்கு கதை வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
இவரது சிறப்பியல்பு என்னவென்றால், எப்போதும் நகைச்சுவையாக வசனம் எழுதுவதே.
ஆக, தமிழ் திரையுலகம் பல திறமைகளை கொண்ட அரிய கலைஞர் ஒருவரை இழந்துள்ளது. இந்தநிலையில், இவரது மறைவிற்கு திரையுலக கலைஞர்கள் தமது அனுதாபங்களை கூறு வருகின்றார்கள்.