கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்க்கு , இறக்கும் போது வயது 81. இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் என ஆரியப்பட்டவர். அண்மையில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமான கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு பேரில், கிரிஷ் ரகுநாத் கர்னாவும் ஒருவராவார்.
கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார்.
இவர் கலையுலகில் ஆற்றிய சேவையால், இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களை பெற்ற சிறப்பிற்குரியவராவார்.
மேலும், தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
இந்தநிலையில், இவரது மறைவையொட்டி, இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உலகப் பிரபலங்கள் என, பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி அவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் இன்று அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.