தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்தில் தோன்றுவதும்,ஒரு பாடலுக்கு நடிகைகள் பல லகரங்களை வாங்கிக் கொண்டு குத்தாட்டம் போடுவதும் வழமையாக நடந்து கொண்டிருக்கும் சங்கதி.
நடிகர்,நடிகைகள் ஆடுவது ஓகே.
இங்கே இப்போது, தான் இசையமைக்கும் ஒரு படத்தில் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர் நடனமாடியிருக்கிறார்,அதுதான் விசயமே....
அண்மைக்காலமாக தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் ஆகியோர் வரிசையில் யாரப்பா அது புதுசா என்று யோசிக்கிறீர்களா?
புதுமுகம் ஜெய்நாத், நாயகி அக்ஷயா மற்றும் ஆடுகளம் நரேன், நம்ம இமான் அண்ணாச்சி ஆகியோர் 'நண்பர்கள் நற்பணி மன்றம்' என்ற ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்குத் தான் இசையமைக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. இசையமைக்கிறதோட நிக்காமல், இந்த படத்தில் கிராமப்புறத்தில் இடம்பெறும் படப்பிடிப்பில் வரும் பாடலுக்கே ஹீரோ மற்றும் ஹீரோயின் கூட தானும் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறாராம் ஸ்ரீகாந்த் தேவா.
ஆடுவது ஓகே தான்... அனால் அந்த உடம்பை தூக்கி எப்பிடி ஆடியிருப்பார்...?
இப்ப உங்க கற்பனை குதிரையை தட்டி மனத்திரையில பாருங்க... படம் வந்ததும் எல்லாருமா சேர்ந்து திரையில பார்ப்போம்...