இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட கோலி சோடா திரைப்படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரையிட தேர்வாகியுள்ளது.
பசங்க திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் முக்கிய பாத்திரமேற்று நடிக்க ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருப்பெற்றதே இந்த கோலி சோடா திரைப்டம்.
கோயம்பேடு அங்காடியில் இருக்கும் குழந்தை தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய இந்த திரைப்படம் விமர்சர்களிடமும், ரசிகர்களிடமும் அதிக வரவேற்ப்பை பெற்றது. இந்த வருடத்தில் வெளிவந்த பெரிய நடிகர்களின் திரைப்பட வசூலில் பின்னுக்கு தள்ளி வசூலில் முன்னேறியது இந்த கோலி சோடா திரைப்படம்.
இந்த நிலையில் 19 வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள கோலி சோடா திரைப்பட இயக்குனர் விஜய் மில்டன் தன்னுடைய மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்துகிறார்.
"இந்தத் திரைப்படவிழாவிற்கு எங்கள் திரைப்படம் தேர்வாகியிருப்பது எங்கள் குழுவிற்கு பெருமையைத் தருகிறது. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அதை உயரிய நோக்கோடு தான் எடுத்தோம். இதை நான் மிகப்பெரிய கவுரமாகக் கருதுகிறேன். திரையிடலுக்கு செல்லும் திட்டமும் உள்ளது" என்றார். மில்டன் தற்போது விக்ரம் நடிப்பில் '10 எண்றதுக்குள்ள' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தென் கொரியாவில் அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை இந்தத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது. ஆசிய திரைப்பட விழாக்களில் முக்கியமான விழாவாக பூசன் திரைப்பட விழா கருதப்படுகிறது. 'கோலி சோடா' ஆசிய சினிமாக்களுக்கான பிரத்யேகப் பிரிவில் திரையிடப்படுகிறது. பாலிவுட் திரைப்படங்களான 'ஹைதர்'இ 'ஃபைண்டிங் ஃபானி' ஆகிய திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.