நடிகர் சூர்யா தனது நண்பர் விக்ரமின் ஐ பட போஸ்டரை தனது வாட்ஸ் ஆப் - Whatsapp ப்ரொபைல் படமாக வைத்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் ட்ரெய்லரை யூடியூப்பில் ஏராளமானோர் பார்த்துள்ளனர், பார்த்து வருகின்றனர்.
ஐ பட டிரெய்லர், பாடல்கள் பற்றி தான் ஃபேஸ்புக், ட்விட்டரில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
இப்போது மற்றொரு முன்னணி நடிகரான சூர்யாவின் 'வாட்ஸ்ஆப் ப்ரொபைல்' படம் என்ன தெரியுமா? I ADVERTISEMENT !!!
இந்நிலையில் சூர்யாவின் வாட்ஸ்ஆப் ப்ரொபைல் படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் சூர்யா தனது ப்ரொபைல் படமாக ஐ படத்தின் போஸ்டரை வைத்துள்ளார்.

சூர்யாவும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர். எனவே தனது நண்பரின் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அவர் இதை செய்துள்ளார்.
ஐ பட போஸ்டரை மட்டும் சூர்யா பயன்படுத்தவில்லை. மேலும் ஐ படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ஐ என ஆச்சரியப்பட்டுக்கொண்டே இன்னொரு விஷயத்தையும் நினைவுபடுத்திக் கொள்வோம்...
சூர்யா இன்னமும் ஷங்கரின் இயக்கத்தில் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை.
(இது எப்பிடி இருக்கு?)