ராகம தேவாலயத்தின் பிரதான பூசாரியாக இருந்த லொகு சீயா கொலையை மீண்டும் விசாரிக்கும் படி அவரது மகன் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
லொகு சீயா என அழைக்கப்படும் எம்.எஸ்.எம். நியாஸின் கொலையில் மர்மம் இருப்பதாக அவரது மகனான சூட்டி சீயா என்று அழைக்கப்படும் எம்.என்.எம். ஹிஜாஸ் தெரிவித்துள்ளார்.
பாரிய மோசடிகள், ஊழல்கள், பதவி துஸ்பிரயோகங்கள் மற்றும் முறையற்ற அரச வளங்களின் பாவனை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலேயே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது தந்தை வெள்ளை வேனில் வந்தோரால் கட த்தப்பட்டதாகவும் , அவரது கொலையுடன் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகள் உட்பட கம்பஹா மாவட்ட த்தின் முன்னாள் எம்.பி ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதுதிட்டமிட்ட கொலை என அவர் தெரிவித்துள்ளார்.
அக்கறைப்பற்று கடற்பகுதியில் வைத்து லொக்கு சீயாவின் சடலம் இற்றைக்கு 3 வருடங்கள் மற்றும் 10 மாதங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் ஏற்கனவே சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.