தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இளைய தளபதி விஜய் .
இவரது படம் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலாகலமாக இருக்கும். அந்தளவிற்கு இவரது திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருவது யாவரும் அறிந்ததே.
இவரது நடிப்பில் அண்மையில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட் . ஆனாலும் இந்த திரைப்படத்தின் வசூலில் சாதனை படைக்குமா என்ற கேள்வியும் பலரிடத்தில் இருந்தது. ஏனெனில் அந்தளவிற்கு மோசமான விமர்சனங்களும் இருந்தன.
தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் இரண்டாவது நாள் வசூல் அப்படியே குறைந்து விட்டது. சென்னையில் இரண்டு நாள் முடிவில் ரூ.3.57 கோடிவரை வசூல் எட்டியிருக்கிறது.
தமிழகத்தில் முதல் நாளில் இந்த படம் ரூ.33 கோடிக்கு மேல் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.28 கோடியே வசூலாகியிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாள் முடிவில் ரூ.100 கோடிவரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.