இயக்குனர் பிரசாந்த் நீல் 2018ம் ஆண்டில் இயக்கிய KGF திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டவர் கன்னட நடிகர் யஷ்.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் தற்போது KGF- 2 வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படமும் மக்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்தபடியாக தன்னுடைய புதிய திரைப்படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் யஷ். அந்தவகையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தனது நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து ஸ்மார்ட்டாக மாறி அசத்தி இருக்கிறார்.6 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாடியை குறைத்து புதிய நடிகராக மாறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.