Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
மசாலா முருங்கைக்காய் வறுவல்

Sooriyan FM Gossip - மசாலா முருங்கைக்காய் வறுவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,110 Views
சுவையான முருங்கைக்காய் வறுவல் எப்படி செய்வது ?
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் பொட்டுக்கடலை – 1 கரண்டி, வேர்க்கடலை – 2 கரண்டி, போட்டு லேசாக வறுக்க வேண்டும்‌. இந்த இரண்டு பொருட்களும் பாதி அளவு வறுபட்டு வந்தவுடன் வரமிளகாய் – 6 சீரகம் – 1 கரண்டி சேர்த்து பொன்னிறமாக கருக விடாமல் வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு ஒரு மிக்ஸியில் போட்டு, இந்த பொருட்களோடு 10 பல் – பூண்டு சேர்த்து கொரகொரப்பாக பொடி போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக 6 லிருந்து 7 முருங்கைக்காய்களை சாம்பாருக்கு வெட்டுவது போல வெட்டி கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு இந்த முருங்கைக்காய்களை எண்ணெயிலேயே வேகவைக்க வேண்டும்.

நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு வேக வையுங்கள். இடையிடையே மூடியை திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். முருங்கை காய் நன்றாக வெந்தவுடன் கடையிலிருந்து முருங்கைக் காய்களை மட்டும் எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அந்த கடாயில் எண்ணெய் மீதம் இருக்கும் அல்லவா. அதோடு இன்னும் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இந்த எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 கரண்டி, சீரகம் – 1/2 கரண்டி, உளுத்தம் பருப்பு – 1 கரண்டி, கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை வெங்காயத்துடன் சேர்த்து விடுங்கள். இப்போது வதக்கலுக்கு தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் – 1 கரண்டி , மஞ்சள் தூள் – 1/4 கரண்டி, போட்டு இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஒரு நிமிடத்திற்கு கலந்து விடுங்கள். மிளகாய் தூள் பச்சை வாடை நீங்கட்டும்.

அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் எடுத்து கடாயில் இருக்கும் முருங்கைக்காய் மேலே தூவி அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.

முருங்கைக்காயில் மசாலா நன்றாக இறங்கும் வரை இரண்டு நிமிடம் போல சுருள சுருள முருங்கைக்காயை வதக்கி அடுப்பை அணைத்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். இதனுடைய ருசி அசத்தலாக இருக்கும்.

வறுவல் செய்யும் போது எந்த இடத்திலும் தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். இந்த முருங்கைக்காய் வறுவலுடைய ருசி மாறிவிடும். தண்ணீர் ஊற்றாமல் முருங்கைக்காயை எண்ணெயில் வேக வைத்த தான் இந்த வறுவலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top