சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி உண்ணும் மசாலா வடை எப்படிச் செய்வது என்பதை இன்றைய பதிவில் பார்ப்போம்.
டீ குடிக்கும் போது, இந்த மசாலா வடையை உண்டு மகிழலாம். சிலருக்கு மசாலா வடையை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென வருவதில்லை.
எனினும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செய்வதால், மசாலா வடை சுவையாக இருப்பதுடன், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
இந்த மசாலா வடை செய்யத் தேவையான பொருட்கள் இதோ,
உப்பு - தேவையான அளவு
பட்டை - 1 இஞ்ச்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம்
சோம்பு
வெங்காயம் 1
புதினா - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 1 ஸ்பிரிங்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/4
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
கடலைப் பருப்பை ஒன்றரை மணி நேரம் ஊற வைத்தால் தான், வடை மொறுமொறுவென வரும். ஊறியதும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.
பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஊறவைத்த கடலை பருப்பு உப்பு என்பவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாவு மைய இல்லாமல் மொறப்பாக இருக்க வேண்டும். ஒரு சில கடலைப் பருப்புகள் அப்படியே இருக்க வேண்டும்.
இப்போது அரைத்த மாவை அகல பாத்திரத்தில் போடவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா,இஞ்சி பூண்டு பேஸ்ட் என அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வையுங்கள். அடுத்ததாக உள்ளங்கையில் தண்ணீர் நனைத்து,சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வட்டமாகத் தட்டி அப்படியே மெதுவாக எண்ணெய் கடாயில் போடவும்.
இப்படி ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மசாலா வடை தயார்.