நடிகர் சூர்யா தற்போது பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில் இடையில் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் பணிகளை இயக்குனர் ரவிக்குமார் ஆரம்பித்து விட்டதாகவும் மேலும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை செய்வதற்கு மட்டும் ஒரு வருடம் தேவைப்படும் எனவும் இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.