1,750 Views
நீண்ட நாட்களுக்கு பின்னர் கருநிறத் தலைமுடியோடு அஜித் நடித்துவரும் படம் இதுவரை பெயர் இன்றியே படமாக்கப்பட்டு வருகின்றது.
அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை நவம்பரில் வெளியிடப் போகிறார்களாம்.
பாடல்கள் தயாராகிவிட்டது,படமும் நிறைவுறும் நிலையில் உள்ளது,ஆனால் படத்துக்கான தலைப்பு மட்டும் இதுவரை வரவேயில்லை.
ஆயுத பூஜைக்கே படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் வெளியிடவில்லை. தீபாவளியை முன்னிட்டு இந்தப் படத் தலைப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பே முடியப் போகிறது. ஆனால் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் ரகசியம் காக்கிறார்கள். அஜீத் படங்களுக்கு அதை ஒரு ட்ரெண்டாகவே வைத்துவிட்டார்கள்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு பெயர் வைப்பதற்கு ஒரு இழுபறி நிலையே தொடர்கிறது.இன்னும் இன்னும் பெயர் இழுத்தடிக்கப்படும் நிலையில் தீபாவளிக்கு படமல்ல, படத்தின் தலைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பாக ‘சத்யா' அல்லது ‘ஆயிரம் தோட்டாக்கள்' ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதுதவிர, மேலும் 3 தலைப்புகளை கௌதம் மேனன் பரிசீலனையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியாயினும் படம் வெளிவந்தால் போதும் என்ற நிலையில் இப்போது தல ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.
தல 55 - புத்தம்புதிய படங்கள்