Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
வருகிறார் A.R.ரஹ்மானின் வாரிசு அமீன் - மணிரத்னத்தின் புதிய திரைப்படத்தில்

Rahman's son's debut - வருகிறார் A.R.ரஹ்மானின் வாரிசு அமீன் - மணிரத்னத்தின் புதிய திரைப்படத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,026 Views
தென்னிந்திய தமிழ்திரையுலகில் மட்டுமன்றி உலகத் தரத்தில் இசப்புயலாக தன் இசைத்திறமையை நிருபித்தவர், இரண்டு ஒஸ்கார் விருதுகளை ஒரே மேடையில் கைப்பற்றியவர், பல புதிய இளம் பின்னணிப் பாடகர்களுக்கு திரையுலகில் அறிமுகம் தந்தவர் என புகழுக்கே சொந்தக்காரர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். 

                                                            இந்த "இசைப்புயலை" திரையுலகுக்கு தன்  "ரோஜா"  திரைப்படத்தின் மூலம் ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கிய பல வெற்றித்திரைப்படங்களின் அந்த வெற்றிக்கு இசைப்புயலின் இசையும் மிக முக்கியமான பங்குண்டு என்றால் மிகையாகாது.இந்தக் கூட்டணி, இன்னமும் பெயர் இடப்படாத ஒரு திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றது.இதில்தான் ஒரு முக்கியமான விசயமே ஆரம்பிக்கின்றது. 

                                தந்தையை போலவே, மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும்  இந்தப்படத்தில்  தனது தமிழ் திரையுலக பிரவேசத்தை ஆரம்பிக்கிறாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன். இந்தப்படத்தில்,  தந்தையின் இசையில் இடம்பெறும் ஒரு பாடலைப் பாடுவதன் மூலமே திரையுலகில் தன் முதற்பாதம் பதிக்கவிருக்கிறார் இசைவாரிசு அமீன்.இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதி செய்திருக்கிறார்.

பெரிதாக வெளியே தெரியாமலிருந்த ரஹ்மானின் மகன் அமீன் பற்றி அண்மையில் பல செய்திகள் வெளியே வந்திருந்தன.
அமீனை பலர் திரைப்படங்களில் நடிக்க வைக்க அணுகியதாக ரஹ்மான் வழங்கிய பேட்டிகள் பற்றி செய்திகள் வெளிவந்திருந்தது நினைவுபடுத்தக்கூடியது.

வாழ்த்துக்கள் கூறுவோம்...வரவேற்போம்..வாகை சூட..

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top