3,645 Views
ஹெச்பி HP என்று அழைக்கப்படும் ஹெவ்லெட் பேக்கார்ட் (Hewlett Packard) நிறுவனத்தின் முக்கிய துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் இரண்டாக பிரிந்து செயல்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறுவனம் பிரிக்கும் பொழுது ஹெச்.பி நிறுவனத்தில் இருந்து சுமார் 5,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்குவதாகவும் ஹெச்.பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
66 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்நிறுவனத்தை தற்போது மெக் வித்மேன் தலைமை வகித்து நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் வன்பொருள் மற்றும் சேவை பிரிவில் இருந்து Laptop, கம்பியூட்டர் மற்றும் பிரிண்டர் வர்த்தகத்தை தனியாக பிரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹெச்.பி நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக மந்தமான வர்த்தகத்தையே சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் சில பிரிவுகளை தனியாக பிரிப்பதன் மூலம் முக்கிய வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்த முடியும் என மெக் வித்மேன் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே முயற்சியை எடுக்க நினைத்த முன்னாள் தலைவர்கள் சில பல காரணங்களாக கைவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.