"துப்பாக்கி"யின் தோட்டாக்களை விட "கத்தி"பன்மடங்கு கூரானதாம்.துப்பாக்கி படத்தை விட கத்தி பன்மடங்கு வீரியமாக இருக்கும். இப்படி படக்குழுவினர் கூறுகிறார்கள். கத்தி படத்திற்கு ஒரு பக்கம் கடும் எதிர்ப்புகள் இருந்தாலும் கூட சென்சார் சான்றிதழ் வாங்கி விட்ட மகிழ்ச்சியில் இப்போது படக் குழுவினர் உள்ளனர்.
இப்படத்தின் இயக்குனர் AR முருகதாசின் இயக்கத்தில் விஜய் ஏற்கனவே நடித்து பெரு வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தை விட இந்தப் படம் மிக்கபெரும் பிரமாண்டமாம்.
தயாரிப்பு ,கதை ,படத்தை எடுத்த விதத்திலும் படத்தின் அனைத்து அம்சங்களும் பெரிதாக பேசப்படும் என்று படக்குழு கூறுகிறது.
அத்தோடு படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு குடும்பத்தோடு பார்க்கும் வகையில் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கிறாராம் AR முருகதாஸ்.
பாடல்கள் எல்லாம் அனிருத்தின் இசையில் குதூகலிக்க வைத்துள்ள நிலையில் விஜயின் நடிப்பும் மிகப்பெரும் விருந்தாக அவர் ரசிகர்களுக்கு அமையும் என்று நம்பபடுகின்றது.
"துப்பாக்கி"யின் தோட்டாக்களை விட இப்போதைய "கத்தி"பன்மடங்கு கூரானது என்று அதனாலதான் சொல்கிறார்களோ....
ஆவலோடு நாமும் காத்திருப்போம்.