பேர்முடா முக்கோணம் என்றாலே மர்மங்கள், பல திகில்கள் நிறைந்த இடமென்பது அனேகமானோர் அறிந்து தெரிந்து ஒரு விடயம்.
இது பற்றிய பல தகவல்களை சூரிய ராகங்கள் அடிக்கடி வழங்கியிருக்கிறது.
இந்த முக்கோணப் பகுதியினூடாக பயணம் செய்த பல விமானங்கள், கப்பல்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே யாருக்கும் தெரியாது. இதற்கு காரணம் அந்த பகுதியிலிருக்கும் உயர் சக்தி கொண்ட காந்தமே எனவும் பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எனினும் இது தொடர்பான ஆராய்ச்சிகளும், ஊகித்துக்கொள்ளக்கூடிய சில முடிவுகளும் வந்த வண்ணமே உள்ளன.
கடந்த ஆண்டு சைபீரியாவில் பாரிய பள்ளத்தாக்கு ஒன்று தோன்றியது. இது பற்றி இந்த தளத்தில் நாம் பதிவிற்றியிருந்தோம்.
ரஷ்யாவில் திடீரெனத் தோன்றிய பள்ளம்.. - உலக அழிவின் ஆரம்பம்?
இது தொடர்பான காணொளி

இது தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டு வரும் நிலையில், பேர்முடா முக்கோணம் மற்றும் சைபீரியாவில் பள்ளத்தாக்குக்கும் இடையேயான ஒரு தொடர்பு கண்டறியப்பட்டுள்ளதாக, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு வகையான வாயு வெடிப்பே இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெறுவதொடு, இந்த மர்மங்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் இதே தளத்தில் எதிர்பாருங்கள்.