பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திரமான பிடியெடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் அவுஸ்ரேலிய வீரர் டோஹெர்ட்டியின் பந்தை பாகிஸ்தான் இடது கை கலக்கல் ஆட்டக்காரர் பவட் ஆலம் முகம்கொடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைப்படி பந்து வீசப்பட்டு அது துடுப்பாட்ட வீரரை சென்று ,அதை அவர் ஆடுவதற்கு முன்பாக எந்த ஒரு களத்தடுப்பாளரும் தங்கள் இடத்தை/ஸ்தானத்தை விட்டு நகர்வது முறையற்றது.இப்படி ஏதாவது நடந்தால் நடுவர்கள் அதனை முறையற்ற பந்தாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.
ஆனால் களத்தடுப்பாளர் ஏற்கனவே தீர்மானித்து நகர்வது துடுப்பாட்ட வீரரை ஏமாற்றும் வேலையாக இருக்கிறது என்று கள நடுவர்கள் அந்த நகர்வுக்கு விளக்கம் அளித்தால் அது செல்லாது. ஆனால் விசித்திரம் என்னவென்றால் ஸ்மித் விவகாரத்தில் அவர் செய்தது சரி என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை இப்போது விளக்கம் கொடுத்துள்ளது.
இப்படியெல்லாம் சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் எப்பிடி ஸ்மித் பிடி எடுத்தார் தெரியுமா?
பாவாட் அலாம் இடது கையால் துடுப்பெடுத்து ஆட தயாரான போது ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் ஸ்டீவ் ஸ்மித் நிறுத்தப்பட்டார்.. பாவாட் அலாம் பந்தை sweep செய்ய ஆயத்தமானவுடன் slip திசையில் நின்ற ஸ்டீவ் ஸ்மித் Leg Slip ற்கு மாறினார். அப்போது பந்து வீசப்பட்டு கொண்டிருந்தது. ஸ்டீவ் ஸ்மித் மாறியதை பாவாட் அலாம் கவனிக்கவில்லை. இந்த நிலையில் பந்தை Leg Slip திசையில் ஸ்டீவ் ஸ்மித் மிக எளிதாக பிடி எடுத்து ஆட்டமிழக்க செய்தார்.
ஆனாலும் விதிமுறையின்படி ஸ்மித் பிடித்த பிடியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ICC சமீபமாக இந்த விதிமுறையை சற்றே தளர்த்தியுள்ளது. அதன்படி ஸ்மித் ஸ்லிப்பிலிருந்து Leg slip ற்கு நகர்ந்து பிடி எடுத்தது ஏற்புடையதே என்று ICC தெரிவித்துள்ளது.

இறுதி ஓவரில் 2 விக்கெட்கள் கையிருப்பில் இருக்க 2 ஓட்டங்களை பெற முடியாது பாகிஸ்தான் பரிதாபமாய் தோற்றுப்போன 3-வது ஒருநாள் போட்டியில் ஸ்மித் பிடித்த பிடிதான் இந்த சர்ச்சைக்கு காரணமானது.
தொடரில் பாகிஸ்தான் 3-0 என்று அவுஸ்ரேலியாவிடம் தொல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.