இயக்குநர் A . R முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கஜினி'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரை வரவேற்பில் உள்ள பாடல்களாக உள்ளன.
ஆகவே, 'கஜினி 2' திரைப்படம் குறித்து இயக்குநர் A . R முருகதாஸிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.
சல்மான்கானை வைத்து தற்போது இவர் இயக்கியுள்ள 'சிக்கந்தர்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்வின் போது 'கஜினி 2' திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் ''என்னிடம் சில யோசனைகள் உள்ளது. இதுகுறித்து விவாதித்தோம். அனைவருமே அவர்களுடைய படங்களில் மும்முரமாக இருக்கிறோம். நேரம் அமையும்போது அமர்ந்து பேசி முடிவு எடுப்போம்" எனக் கூறியுள்ளார்.
எனவே, 'கஜினி 2' திரைப்படம் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.