IPL தொடரில் வர்ணனையாளர்களாகச் செயற்பட்டு வரும் ஹர்ஷா போக்லே மற்றும் முன்னாள் நியூசிலாந்து வீரர் Simon Taufel ஆகிய இருவரையும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது என Bengal கிரிக்கெட் சங்கம் (CAB) BCCIக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளப் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசி இருந்ததுதான் எனக் கூறப்படுகிறது.
இந்த IPL தொடரின் ஆரம்பத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளப் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.