ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா உபாதை காரணமாக IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சந்தீப் சர்மா உபாதைக்குள்ளாக முன்னர் இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் மொத்தமாக 10 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் சந்தீப் சர்மாவின் பிரதியீட்டு வீரராக ஆகாஷ் மத்வால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.