18 வருட காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் , ரவி மோகனின் அண்மைய செயற்பாடுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமண விழாவிற்கு ரவி மோகனும், அவரது பெண் தோழியான பாடகி கெனிஷாவும் ஜோடியாக கைகோர்த்துச் சென்றிருந்தனர்.
இந்த Video சமூக வலைத்தளங்களில் வெளியாகியதும் பல்வேறு சர்ச்சை கருத்துகள் வெளியாகியிருந்தன.
இதற்கு பொறுமையிழந்த ஆர்த்தி அறிக்கையொன்றை வெளியிட்டு என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்.
எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. ரவி மோகன் தன் காதலை மறந்தது பரவாயில்லை ஆனால் , தனது பொறுப்புகளையும் மறந்து விட்டார்.
தன் குழந்தைகளுக்காக எப்போதும் நிற்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆர்த்தியின் இந்தக் கருத்துக்களுக்கு ரவி மோகன் தரப்பில் இருந்து எந்தக் கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை இடம்பெற்ற ஐசரி கணேஷின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்விலும் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் மீண்டும் ஒன்றாக கலந்து கொண்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கும் பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.