இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் வடிவேலு - ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாரீசன்'.
இத்திரைப்படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இத்திரைப்படத்தில், விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என திரைப்படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், 'மாரீசன்' திரைப்படத்தின் Teaser இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.