சீனாவின் வுஹான் மாகாணத்தில் சமீபத்தில் Fitness போட்டி நடைபெற்றது. இதில், மத்திய சீனாவின் Anhui மாகாணத்தில் உள்ள Mansion ஐ சேர்ந்த 71 வயதான சன் மிங்குய் (71) என்ற பெண் 3ஆவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
போட்டியில் கலந்து கொண்டவர்களில் இவர்தான் மிகவும் வயதான போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், உடற்பயிற்சி மீது உள்ள ஆர்வத்தால் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட சன் மிங்குயி, "எனக்கு 71 வயது. வயது என்பது ஒரு எண் மட்டுமே, ஒரு வரம்பு அல்ல. டம்பல்ஸைத் தூக்கி எனது தசைகளை அழகாக மெருகேற்ற விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
வயதானவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தற்போது சன் மிங்குயி, தனது உடற்பயிற்சி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
வயதானாலும் சாதிக்க முடியும், அதற்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே என்பதை நிரூபித்துள்ளார் சன் மிங்குய்.