ஹொலிவுட் சினிமா இரசிகர்களை அதிகளவில் கவர்ந்த நடிகர்களுள் மிக முக்கியமானவர் நடிகர் Tom Cruise. இவரின் தனித்துவமான Action காட்சிகளுக்கு ஏராளமான இரசிகர்கள் உண்டு.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'Mission: Impossible – The Final Reckoning' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சி மூலம் கின்னஸ் சாதனை படைத்தார் Tom Cruise.
இந்நிலையில் பல்வேறு சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் சொந்தக்காரரான Tom Cruiseற்கு, திரைத்துறையில் ஆற்றிய பங்கிற்காக கௌரவ ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் விருதானது எதிர்வரும் November மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது விழாவில் நடிகர் Tom Cruiseற்கு வழங்கப்படவுள்ளது.