ரெட்ரோ திரைப்படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் இந்தத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், 'சூர்யா 45' திரைப்படத்தின் Title மற்றும் Teaser நாளை வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.