விஜய் அன்டனி தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த லியோ ஜோன் போல் இயக்கத்தில் 'மார்கன்' திரைப்படத்தில் நடிக்கின்றார்.
இந்தத் திரைப்படம் Crime Thriller கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் Trailer அண்மையில் வெளியாகியது. இந்த நிலையில் 'மார்கன்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.