ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யஷ் தயாள் மீது, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
குறித்த பெண் தனது முறைப்பாட்டில், கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஒருவருடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்
கடந்த 5 வருடங்களாக நானும், யஷ் தயாளும் நன்றாக பழகினோம். திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி கொடுத்தார்.
மேலும், அவரது குடும்ப நபர்களிடம் என்னை 'மருமகள்' என அடையாளப்படுத்தினார்.
இதனை நம்பி அவரிடம் பல வழிகளில் ஏமாந்துவிட்டேன்.
5 வருடங்கள் நன்றாக பழகிய நிலையில், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார்.
மேலும், திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டு சென்றார்.
அதன்பிறகுதான், எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அவர் மற்ற பெண்களுடனும் இதே போன்ற தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால்தான், தற்போது முறைப்பாடு கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்த விடயத்தில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.