தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது கணேஷ் கே.பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று தனது இரண்டு மகன்களையும் ரவி மோகன் சந்தித்துள்ளார். அத்துடன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ரவி, “என்னுடைய பெருமை, என் குறும்பாக்கள்” என்று உணர்ச்சிவசமாகப் பதிவிட்டுள்ளார்.ரவி மோகனின் மூத்த மகன் ஆரவ் ரவிமோகனுடம் இணைந்து ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.