சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'குபேரா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இந்தத் திரைப்படத்தில் நாகர்ஜுனா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தத்திரைப்படம் வெளியான நாளில் இருந்து இரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சங்களைப்பெற்று வருகிறது.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வெளியாகி தற்போது 12 நாள் முடிவில் மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ. 130 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் கதையை சேகர் கம்முல்லா ஆரம்பத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம்தான் சொன்னதாகவும் ஆனால் அவர் நடிக்கத்தயங்கியதால் தனுஷிடம் இந்தக்கதையை கூறியதாக இயக்குநர் சேகர் கம்முல்லா தெரிவித்துள்ளார்.