இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள 'Bun Butter Jam' திரைப்படத்தில் Big Boss புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் First Look Posterஐ சில மாதங்களுக்கு முன் திரைப்படக்குழு வெளியிட்ட நிலையில், இத்திரைப்படம் இம்மாதம் 18ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் 3ஆவது பாடல் இம்மாதம் 4ஆம் திகதி வெளியாகும் என்று திரைப்படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.