விவேக் ஆத்ரேயாவின் இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் 2024ஆம் ஆண்டு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ' Surya's Saturday '.
இத்திரைப்படத்தில் நடிகர் நானியுடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்திற்கு கதை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்பொழுது 'ஜன நாயகன்' திரைப்படத்தை இயக்கும் எச்.வினோத்தும் நடிகர் ரஜினிகாந்திற்கு கதை கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2 ' திரைப்படத்திற்குப் பிறகு எந்தத் திரைப்படத்தினை தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.