Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
கிராவ்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில் !

SooriyanFM Gossip - கிராவ்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views
இங்கிலாந்து , இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

3 ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் , ஜெக் கிராவ்லி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரை பும்ரா வீசினார். அப்போது, ஓவரின் நடுவே இங்கிலாந்து வீரர் ஜெக் கிராவ்லி நேரத்தை கடத்த முற்பட்டார். பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில், ஜெக் கிராவ்லி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது.

இதனால், ஆத்திரமடைந்த இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் ,ஜெக் கிராவ்லியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார்.

இதனால், மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இந்திய அணி ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் நேரம் நிறைவடைந்ததால் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கிராவ்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட என்ன காரணம்.? என்பது குறித்து கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, 6 நிமிடங்கள் மீதமிருந்ததால் 2 ஓவர்களை வீசாமல் இருக்க எந்த அணியும் மூளையற்றவர்கள் கிடையாது.

அதனால் 3ஆவது நாள் முடிவு திரைப்படம் போல முடிந்தது. நாள் முழுவதும் களத்தடுப்பில் ஈடுபட்ட வீரர் நாளின் இறுதியில் வந்து 2 ஓவர்களைஎதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு விக்கெட் விழுந்திருந்தால் எங்களுக்கு கச்சிதமாக அமைந்திருக்கும். இல்லையென்றாலும் நாளை நாங்கள் அனலாக செயல்படுவோம்.

அவ்வாறு நடந்தது விளையாட்டின் ஒரு அங்கம். ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரனாக எனக்கு கடைசி 5 நிமிடங்களில் கிராவ்லி எப்படி இருந்திருப்பார் என்பது தெரியும். அது அனைவருக்குமே தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top