Youtube தனது புதிய 'Hype' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது YouTube இல் Videos உருவாக்கும் சிறிய Creatorsக்கு மிகவும் பயனுள்ள புதிய வசதியாகும்.
வழக்கமாக, Youtube போன்ற பெரிய தளங்களில் புதிய கிரியேட்டர்கள் தங்கள் படைப்புகளைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பது சவாலாகவே இருந்து வந்தது.
இலட்சக்கணக்கான வீடியோக்களுக்கிடையே உங்கள் தனித்துவமான குரல் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால், 'Hype' அம்சம் இந்தத் தடைகளை உடைத்தெறியும் கருவியாக உருவெடுத்துள்ளது.
எளிமையாகச் சொன்னால், 'Hype' என்பது உங்கள் Videoவுக்குக் கிடைக்கும் "Digital Push". ஒரு பார்வையாளர் உங்கள் வீடியோவின் 'Like'க்கு கீழே உள்ள 'Hype' ஐ அழுத்துவதன் மூலம், அந்த வீடியோவை அவர் பரிந்துரைக்கிறார் அல்லது ஊக்குவிக்கிறார் என்று அர்த்தம்.
இவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு 'Hype'புக்கும் உங்கள் Videoவுக்குப் புள்ளிகள் சேரும்.
இந்தப் புள்ளிகளின் அடிப்படையில், Youtube 'Top 100 Hype செய்யப்பட்ட video’ என்ற தரவரிசைப் பட்டியலை உருவாக்கும்.
உங்கள் Videoவுக்கு எவ்வளவு அதிகமான 'Hype' கள் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகமாக இந்தப் பட்டியலில் மேலேறி, அதிகப்படியான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.
குறிப்பாக, 5 இலட்சத்திற்கும் குறைவான Subscribers கொண்ட
Createrகளுக்கு இந்த அம்சம் சிறந்த வாய்ப்பாக காணப்படுகிறது.