இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜனிகாந்த் நடிப்பில் இன்றைய தினம் வெளியான 'கூலி' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப்பெற்று வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தநிலையில் "ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயை வைத்து திரைப்படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து திரைப்படம் எடுப்பீர்கள்?" என பத்திரிகையாளர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்ட கேள்விக்கு "எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது கண்டிப்பாக பண்ணுவேன். அவருடன் திரைப்படம் பண்ண வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.