Google நிறுவனம், தனது தேடல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் (interactive) Search Live in AI Mode என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Google நிறுவனம், இந்தியாவில் தனது மொபைல் தேடல் அனுபவத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த அம்சம்,Online தேடல்களை உரையாடல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது. பயனர்கள் இப்போது கூகுளுடன் நேரடியாகப் பேசலாம். நீங்க கேட்கும் கேள்விக்கு AI உடனடியாகப் பதிலளிக்கிறது.
உங்க Phone Cameraவை ஒரு பொருள் அல்லது காட்சியின் மீது காட்டினால், அதை AI ஆராய்ந்து பதிலளிக்கும். இந்த அனுபவம் Hands Free முறையில் இருப்பதால், நீங்க ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யலாம்.