ஒரு Call எடுக்கப்படாமல் போனால், பயனர்கள் உடனடியாக Voice Note அல்லது Video Note அனுப்ப முடியும்.
இது Voice Mailக்கு மாற்றாக செயல்படும். Voice Chat-இல், “Cheers” போன்ற Real Time Reaction அனுப்ப முடியும்.
Group Video Callலில், பேசும் நபரை தானாகவே Spotlight செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
Midjourney மற்றும் Flux போன்ற புதிய AI மொடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள், WhatsApp இல் நேரடியாக உயர்தர தனிப்பயன் படங்களை உருவாக்க முடியும்.
AI-powered photo animation மூலம், எந்த static image-ஐயும் சிறிய வீடியோவாக மாற்றி பகிர முடியும்.
புதிய Media Tab மூலம், அனைத்து media, documents மற்றும் link-களை ஒரே இடத்தில் எளிதாக தேட முடியும். Link previews சுருக்கமாகக் காட்டப்படும்.
Interactive ஸ்டிக்கர்கள், பாடல் வரி templates, question prompts ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
பயனர்கள் ஸ்டேட்டஸில் கேள்விகளை போஸ்ட் செய்து, பார்வையாளர்களிடமிருந்து நேரடி பதில்களை பெற முடியும்.
பின்தொடர்பவர்களிடம் நேரடி கேள்விகளை கேட்டு, கருத்துக்களை பெற முடியும்.
இந்த அம்சங்கள்,WhatsApp ஐ மிகவும் வெளிப்படையான, வேகமான, ஈர்க்கக்கூடிய தொடர்பாடல் தளமாக மாற்றுகின்றன.