தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் எச்.வினோத்.
இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
'ஜன நாயகன்' திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத்- நடிகர் தனுஷ் இணையும் திரைப்படத்தில் Sam.CS இசையமைக்கவுள்ளதாக அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.