தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, சூர்யா நடிக்கும் 45 ஆவது திரைப்படமான 'கருப்பு' திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்து திரைப்படம் வெளியாகவுள்ளது.
சூர்யாவின் 46 ஆவது திரைப்படமான 'உனக்கு 20 எனக்கு 45' திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகின்றார். இத் திரைப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடிக்கின்றார். இத் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா ராண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில் இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
சூர்யாவின் 46 ஆவது திரைப்படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி கூறிய கருத்து தற்போது இணையத்தில் வைரலாகிறது. இத் திரைப்படம் 45 வயது இளைஞனுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. கஜினியில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தின் பாணியில் இத் திரைப்படம் இருக்கும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார்.