H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’.
இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அண்மையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அத்தோடு இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது டிசம்பர் 27ம் திகதி மலேசியாவில் நடைபெற்று உலக அளவில் கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.