2016ஆம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார்.இத்திரைப்படம் சர்ச்சைக்குரிய திரைப்படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2ஆவது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி' யாக நடித்துள்ளார். சரித்திர காலத் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 15ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் Trailer வெளியாகி உள்ளது.