விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான 'Hotspot' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'Hotspot 2' திரைப்படத்தின் Trailer சமீபத்தில் வெளியானது. இதில் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். இத் திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இத் திரைப்படம் இந்த மாதம் 23ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.