Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
சின்னசாமி மைதானத்தில் Ai கேமராக்கள் பொருத்த பரிந்துரை

SOORIYAN GOSSIP - சின்னசாமி மைதானத்தில் Ai கேமராக்கள் பொருத்த பரிந்துரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

344 Views
இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்றது.

இதனையடுத்து ஆர்.சி.பி அணிக்கு கடந்த ஜூன் 4 ஆம் திகதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 Ai கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்.சி.பி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

Ai கேமராக்கள் மூலம் இரசிகர்கள் ஒரு இடத்தில் அதிகமாக இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்.சி.பி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top