நடிகர் தனுஷ் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி பிறமொழித் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் தனுஷ் கடந்த ஆண்டில் 'குபேரா' மற்றும் 'இட்லி கடை' திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் இருந்தார்.
அதேபோல், தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூரும், தனுஷூம் இணைந்து இதுவரை எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் எதிர்வரும் பிப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.