தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.
கடைசியாக ‘காந்தா’ திரைப்படத்தில் நடித்திருந்த துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் புதிய திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக்க தாரா'.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சாத்விகா வீரவல்லி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், சாத்விகாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.